பெட்டர் ஹாஃப்!!!
வாங்கிய லட்டுவை உடையாமல் பகிர்வதா?
அல்லது,
காலையில் வாங்கிய பிரட் பாக்கெட்-டினை சிதறாமல் பிரிப்பதா?
அல்லது,
இன்பம் மற்றும் துன்பங்களை பகிர்தலா?
அதுவாகினும் இதுவாயினும்,
ஆரோக்கியமான வாழ்வை நா(ம்)ன் பெற,
நம்முடன்,
இணைந்து வாழும்
துணை மகிழ்வாக இருப்பது அவசியம்!
அதில், நம் பங்கு பெட்டர் ஹாஃப் ஆக இருத்தல் மிக மிக அவசியம்!!!
ஆக,
வாழ்வில் வெகு தூரம் பயணிக்க,
உடல் நலத்துடன்,
மன வளத்துடன்,
இறுதி வரை பயணிக்க,
பெட்டர் ஹாஃப் ஆக இருக்க
வேண்டிக் கொள்ளும்
உனது பாதி!!!
நாள்: 01 ஆகஸ்து 2024