
அமைதியைத் தேடி..
கண்கள் மூடி அமர்ந்து
கரைத்து விடலாம் என எண்ணிய
கடந்த கால நினைவுகள்..
கடந்து விடலாம் என் எண்ணிய
கருமையான நாட்கள்..
கவிதைக்கான ஒரு
கருவாய் மாறிப் போனது..
கண்கள் மூடி இருக்கும் போது
காதுகளினோடு செல்லும் ஓசையை விட
கனமான ஓசைகள் என் இதய அறைக்குள்..
கனிவான அன்பிற்கும்
களங்கமாய் எதிர் சிந்தனைகள்..
களைந்து விட நினைத்து தோற்று போனேன்..
கனவென்பதா?. நினைவென்பதா?..
கனவாகினும்...கசப்பான நினைவாகினும்....
கனமானது இதயமே..
அத்தனை அத்தனை முகங்கள்..
அத்தனை அத்தனை நிகழ்வுகள்...
இதயத்திற்குள் மறு ஒளிபரப்பாய்...
ஓசைகள்... கசப்பான நினைவுகள்...
இல்லா இதயம் வேண்டி..
அமைதியை தேடி..
அலைகின்றேன்...
2 comments:
சார்,
என்ன ஆச்சு ???
ஏன் இப்படி எல்லாம்???
சும்மா தோணுச்சி.. கட கடனு எழுதிட்டேன்..
within 15 minutes...
எப்பவாவது தான் இந்த மாதிரி அமைதியை தேடி மனம் செல்லும்..
இப்ப அந்த percentage ரொம்ப குறைந்து இருக்கு...
Post a Comment