கற்றதும் பெற்றதும்
தென் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை நகரத்தில் பிறந்து,
வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில்
சுமார் நான்கு ஆண்டுகள் நிலை கொண்டு,
மீண்டும்,
தென் தமிழகத்தினை நோக்கி பயணிக்க உள்ளோம்!
பயண நாள்: 27 மார்ச் 2021
இந்நாள் வரை,
நாங்கள் கற்றவை பல…
பெற்றவையும் பல…
ஆம், தன்னார்வலர்கள் நிரம்பிய அவையினை
பார்த்து வியந்த நாட்கள் பல!
கலை மற்றும் அலங்காரம் கற்ற
நாட்கள் பல!
தமிழ்பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்து
மகிழ்ந்த நாட்கள் பல!
குழந்தைகளுடன் நாங்களும் இணைந்தே கற்ற நாட்கள் பல!
நல் நட்புகள் பல!
ஆம், அவர்களுடன் சந்தித்து மகிழ்ந்த நாட்கள் பல!
இரவின் நீளமும் அதிகமான நாட்கள் பல!
சிறு மகிழ்ச்சி கூட, பேரானந்தமான நாட்கள் பல!
ஆம், இங்கு வாழும் எமக்கு,
நட்பூக்கள் தான் உறவு!
உறவானது தான் நட்பு!
எங்களின் ஒவ்வொரு நாளையும்
நினைவுகளில் நிரப்பும்
பொழுதாக மாற்றியமைக்கும்,
ஒவ்வொரு நிகழ்வுகளிலும்
எங்களை,
உங்கள் வீட்டுப் பிள்ளைகளாக
இணைந்து உலவ விட்டமைக்கும்,
நாங்கள் செய்த சிறு சிறு தன்னார்வ பணிகளுக்கு,
நீங்கள் அளித்த ஊக்கத்திற்கும்,
எங்களுக்குள் இருந்த நாடகத் திறன்களுக்காக
வாய்ப்பளித்தமைக்கும்,
பாராட்டியமைக்கும்,
எங்களையும் மேடையேற்றி அழகு பார்த்தமைக்கும்
நன்றிகள் கூறி முடிக்க மனமில்லாமல்,
அனைத்தையும் எங்கள் நினைவுகளுக்குள் நிறைத்து,
மகிழ்ச்சியுடன் புறப்படுகிறோம் …
தென்தமிழகத்தின் கிழக்கு கடற்கரை நகரை நோக்கி...
6 comments:
Welcome
வாழ்த்துகள். எங்கு சென்றாலும் இணைந்து செயல் படுவோம். நன்றி. நாகப்பன் சூரிய நாராயணன், Iowa City
நன்றி... நன்றி...
நமது பணி எங்கிருந்தாலும் தொடரும்
சிறப்பு நண்பா
Congratulations and wishing you your new journey of life......
கலைக் குடும்பத்திற்கு எங்களின் வாழ்த்துகள். எங்கள் மழலைகளை ஊக்குவித்து பலமுறை தங்கள் படைப்புகளில் வாய்ப்பளித்தமைக்கு நன்றி🙏🙏 தங்கள் நட்பை என்றும் விரும்பும் - பழனி , மைதிலி, சுபிக்ஷா , யஷ்விகா
Post a Comment