Monday, 6 October 2008

21. சிறகொடிந்த பறவை




அடியே தோழி..

சிறகொடிந்த பறவையாக இன்று நான்..
ஆம்.. தோழியர் தொடர்பு இல்லா பறவை நான்..

பள்ளிப் பருவத்தில் நானும், நீயும் நாமாக இருந்தோமே..
என் தோளில் நீ, உன் மனதின் பாரத்தை இறக்க...

என் மதிய உணவு உனக்கானது.
உன்னது எனக்கானது..

என் வீட்டு பாடத்தையும் நீயே செய்தாயே
நான் என் வீட்டு வேலைகளை செய்யும் போது.

வகுப்பறையில் நாம் செய்யா குறும்புகளா?
விளையாட்டில் நாம் பெறா வெற்றிகளா??

உனக்கு முன்பே எனக்கு திருமணம் ..
ஆம் பள்ளி படிப்பின் பாதியிலே திருமணம்

அன்று நான் விடை பெற்றேன்
உங்களை விட்டு கண்ணீரின் துணையுடன்..

இது போல நம் தோழியரும் விடை பெற்றார்கள்
வெவ்வேறு திசைக்கு

சில காலம் கழித்து உனக்கும் திருமணமென்று அறிந்தேன்
அறிந்த மகிழ்ச்சி நிலைப்பதற்க்குள் உன் மரண செய்தியும் அறிந்தேன்..

இனி வேண்டாம் இதுபோல் செய்தி ..
இருந்து விடுகின்றேன் சிறகொடிந்த பறவையாக

No comments: