Friday 31 October, 2008

23. வாழ்க்கை துணை..

நம்ம சமுதாயத்துல வாழ்க்கை துணை அப்டினா பெண்களுக்கு மட்டும் தான் அப்டின்னு ஒரு thought இருக்கு...

எனக்கு திடீர்னு பல்பு எரிஞ்சது ("பல்பு" எரியும் போது நான் இருந்த இடத்துல வேற சின்ன பல்பு எறிஞ்சுட்டு இருந்தது)

முன்னாடி காலத்துல, திருமணம் அப்டிங்கரத பெண்களுக்கான ஒரு சமுதாய பாதுகாப்பு அப்படின்னு சொல்லி நடத்தி வச்சாங்க.. அப்போ பெண்களுக்கும் ஆண்களுக்கும் (அதாங்க புருஷன் பெண்டாட்டி) இடையே வயசு வித்தியாசம் நெறைய இருக்கும்.. (எங்க தாத்தா பாட்டிக்கு எல்லாம் குறஞ்சது 10 வயசு வித்தியாசம் இருக்கும்)

அதனால ஆண்கள் ரொம்ப சீக்கிரமாகவே முதுமை அடைஞ்சுடுவாங்க..
அந்த டைம் ல மனைவி தான் கணவருக்கு வேண்டிய பணிவிடைகள் செஞ்சு அவர கண்ணும் கருத்துமாக பாத்துப்பாங்க..அப்போ அவங்க கணவருக்கு சிறந்த வாழ்க்கை துணையாய் இருந்து அவர கவனிச்சுப்பாங்க..

அப்டினா யாரு வாழ்க்கை துணை?

(இப்படி கேள்வி குறியோட நான் இந்த டாபிக்க நிப்பாட்டின அம்புட்டுதான்.. நம்ம மக்கள் இந்த ப்லோக்-எ எரிச்சுடுவாங்க..)

சரி.. இன்னொரு விஷயம்.. நான் முன்னாடியே ரொம்ப கேர்புல்லா ஆரம்பிச்சதுக்கு காரணம் இந்த காலத்துல தாத்தா பாட்டி காலம் வரைக்கும் ரெண்டு பெரும் சேர்ந்து வாழ்றது ரொம்ப கஷ்டம். அப்படியே அவங்க சேர்ந்து இருந்தாலும் மேல சொன்ன சமாச்சாரங்கள் அப்படியே உல்ட்டாவா இருக்கும் :-)


ஒ.கேங்க... இப்போ வாழ்க்கையோட பர்ஸ்ட் ஹால்ப் க்கு வர்றேன்.. திருமணம் செஞ்சு குடும்ப வாழ்க்கை தொடங்குற நம்ம தம்பதியர் சந்தோசமா வாழ்க்கை நடத்துவாங்க..

கணவனோட கடமை வந்து , மனைவிக்கு தேவையான அனைத்தும் செஞ்சு, அவங்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுக்கணும்.. பின்னாடி குழந்தையும் (இங்க plural தான் சரியா இருக்கும்..) பிறந்ததுக்கு அப்புறம், அவங்க அனைவருக்கும் தேவையானத செஞ்சு கொடுக்கணும்..

மொத்ததுல பர்ஸ்ட் ஹால்ப் வாழ்க்கை துணை நம்ம தலைவருதான்..
செகண்ட் ஹால்ப் க்கு நம்ம தலைவிதான்.

என்னங்க நான் சொல்றது சரி தானே..

சரி, இப்போ உள்ள வாழ்கையில மேல சொன்னது சரியா வருமா???????

(மறுபடியும் கேள்வி குறியோடதாங்க நிக்குது.. )

Friday 24 October, 2008

22. படிக்க ரசிக்க..


எனது மின்னஞ்சலில் வந்த கவிதை.. ஏனோ எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அதான் வெட்டி இங்க ஒட்டிட்டேன்..

Monday 6 October, 2008

21. சிறகொடிந்த பறவை




அடியே தோழி..

சிறகொடிந்த பறவையாக இன்று நான்..
ஆம்.. தோழியர் தொடர்பு இல்லா பறவை நான்..

பள்ளிப் பருவத்தில் நானும், நீயும் நாமாக இருந்தோமே..
என் தோளில் நீ, உன் மனதின் பாரத்தை இறக்க...

என் மதிய உணவு உனக்கானது.
உன்னது எனக்கானது..

என் வீட்டு பாடத்தையும் நீயே செய்தாயே
நான் என் வீட்டு வேலைகளை செய்யும் போது.

வகுப்பறையில் நாம் செய்யா குறும்புகளா?
விளையாட்டில் நாம் பெறா வெற்றிகளா??

உனக்கு முன்பே எனக்கு திருமணம் ..
ஆம் பள்ளி படிப்பின் பாதியிலே திருமணம்

அன்று நான் விடை பெற்றேன்
உங்களை விட்டு கண்ணீரின் துணையுடன்..

இது போல நம் தோழியரும் விடை பெற்றார்கள்
வெவ்வேறு திசைக்கு

சில காலம் கழித்து உனக்கும் திருமணமென்று அறிந்தேன்
அறிந்த மகிழ்ச்சி நிலைப்பதற்க்குள் உன் மரண செய்தியும் அறிந்தேன்..

இனி வேண்டாம் இதுபோல் செய்தி ..
இருந்து விடுகின்றேன் சிறகொடிந்த பறவையாக

Friday 3 October, 2008

20. நல்ல மெசேஜ்


ஒரு ஆளோட வீட்ல ஏதோ fire accident. அவர் வெளிய இருந்து ஒரே கத்து கத்தி அழுதுட்டு இருந்தார். அப்போ அவரோட முதல் பையன் வெளிய வந்து "அப்பா நம்ம வீட்ட நேத்தே ஒருத்தர்க்கு வித்துட்டோம்." அத கேட்ட உடனே அவருக்கு ஒரே சந்தோசம்..அப்போ அவரோட ரெண்டாவது பையன் வெளிய வந்து "அப்பா, அண்ணன் நேத்து ஒருத்தர்க்கு விக்கலாம்னு சொல்லி எல்லாம் தயாரா வச்சு இருந்தான். ஆனா இன்னைக்கு தான் பத்திரம் கொடுத்து மத்த ஏற்பாடுகளை செய்யனும்னு இருந்தோம். அதனால இன்னும் விற்க வில்லை.இத கேட்ட வுடனே மறுபடியும் அவர் அழ ஆரம்பிச்சுட்டார்

இந்த கதை மூலமா தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் என்ன சொல்ல வர்றாருனா, எப்போ அவர் அவரோட வீடுன்னு நினச்சாரோ, அப்ப அவருக்கு வருத்தம் இருந்துச்சி..அந்த பொருளை இழந்துடுவோம்னு பயம், கவலை இருந்தது.. எப்போ அவனோடது இல்லேனு நெனச்சானோ, அப்ப சந்தோஷ பட்டாரு.. இதுல இருந்து புரிஞ்சுக்க வேண்டியது எதுவுமே நம்மளோடது கெடையாது.

நம்ம கீதையில இத ரொம்ப தெளிவா சொல்லி இருக்காங்க.,"எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது...." அதே மாத்ரி நாமளும் இருக்கணும்னு .

அத கேட்டுட்டு நான் கொஞ்சம் யோசிச்சு பாத்தேன்.. என்னோட பாமிலி, என்னோட நண்பர்கள், என்னோட வேலை, என்னோட இடம், என்னோட கணினி, என்னோட எழுதுகோல், என்னோட keyboard, Mouse..etc.(இதுல பாருங்க எத்தன "என்னோட") ஆ.. , நிஜமா இதெல்லாம் என்னை விட்டு போக கூடாதுன்னு நினைச்சுகிட்டே இருப்பேன்...

நம்ம நண்பர்கள் கிட்ட தான் நாம ரொம்ப possessive a இருப்போம். அவங்க வேற யார் கூடவாவது close ஆனா, நல்லா பேசினா நமக்கு கோவம் வரும், சண்டை வரும் கஷ்டம்னு தெரிஞ்சு ஏன் நாம அப்படி feel பண்ணனும்? எதுவுமே/யாருமே எப்பவுமே நம்ம கூட இருக்க முடியாதுல அதனால ஏன் நம்ம கிட்ட ரொம்ப நெருக்கமா இருக்கும் நண்பர்கள் கிட்ட, அதிக கோபமும் வெறுப்பும் வருது அவங்க நம்மள விட்டு விலகும் போது.. ஹ்ம்ம்ம்ம்ம்
அதனால யாருமே எப்பவுமே நமக்கு நிரந்தர உறவாக முடியாது...

என்னுடன் பணி புரியும் எனது நண்பர் சொக்கலிங்கம்,
அடிக்கடி ஒரு கருத்து சொல்லுவார்..

"ஒரு பொருள் கிடைக்கலைனா சந்தோசம்

அதே பொருள் கிடைச்சா ரொம்ப சந்தோசம்.."

அதே போல,


ஒரு பொருள் நம்மள விட்டு விலகி போனா சந்தோசம்..
அதே பொருள் விலகி போகலைனா ரொம்ப சந்தோசம்..

இங்க வருத்தம்னு ஒண்ணு கிடையவே கிடையாது.. (ஈஷா யோகா ல சுவாமி
சத்குரு ஜாக்கி வாசுதேவ் .. எல்லோரும் அவர பத்தி கேள்வி பட்டு இருப்பீங்க. அங்க இந்த மாதிரி நெறைய விசயங்கள நமக்கு உணர்துவாங்க.. )

19. அட.. அடடே..

கால்ட்டு நடந்தா நட.
அவங்க தலைல இருக்கு சட..

முக்குல இருக்கு கட..
அந்த முக்குல இருக்கு கட..

அங்க இருக்கு பாரு வட..
அத சாப்டு சொல்லு அட..

நோ நோ . இதுக்கெல்லாம் அழ கூடாது..

இது சின்ன சாம்பிள் தான்.. இன்னும் தொடரும்..