Tuesday 16 June, 2020

யாதும் ஊரே யாவரும் கேளிர்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. ”(புறம்: 192)


அர்த்தங்கள் பொதிந்த ஒரு இலக்கிய பாடல்... இவை 3000 ஆண்டுகளுக்கும் முன்னர் எழுதியது என்றால், வியப்பில் ஆழ்வது உண்மை தானே...


பொருள்

இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.

 எல்லா ஊரும் எம் ஊர்

எல்லா மக்களும் எம் உறவினரே

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

சாதல் புதுமை யில்லை; வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்தது இல்லை

வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை

பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல

இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று

தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்

ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்

சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை


Source :
கார்த்திக் சிவராமன் (wordpress )
https://karthiksivaraman.wordpress.com/2015/08/01/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0/


Friday 15 May, 2020

அன்னையர் தினக் க(வி)தை

அன்னையர் தினக் க(வி)தை!

அன்னையர் என்றாலே அன்பின் இமயம் தானே
அன்பின் இமயத்தில், முத்தாய் இருக்கும் புன்னகை!

ஆம், தன் கரு உருவான நாள் அன்று சிலிர்க்கும் புன்னகை
கரு வளரும் ஒவ்வொரு நாளும் மறவா புன்னகை!!!

வாரங்கள், மாதங்கள் கடந்தாலும்,
குழந்தை பிறக்கவிருக்கும் முந்தைய நாட்கள்
அப்பப்பா! என்ன ஒரு ஆனந்தம்! ஆர்ப்பரிப்பு!

குழந்தை பிறக்கும் நொடி வரை நம் இதயம்
இமயம் வரை துடிப்பதும்
பிறந்த பின் ஆழ் கடல் வரை பூரிப்பதும் இயற்கை!!!

மங்கையாக, சகோதரியாக, தாரமாக இருந்தாலும்
அன்னையாக உருமாறும் போது முழுமை அடைகிறாள் பெண்!!!

அன்னையாக இருப்பதே பெரிய சவால்!
அதுவும் அமெரிக்காவில், இங்கு வளைகுடாப் பகுதியில்,
அன்னையாக இருப்பது எவ்வளவு பெரிய சவால்...

ஓரிரு தியாகங்கள் செய்து, விருது வாங்கும் மக்களின் நடுவில்,
தியாகங்களின் குவியலாக இருப்பினும், விருது ஏதும் பெற்றதில்லை!!!

ஆம், அச்சிறந்த அன்னையருக்கும்,
ஓர் உலக அன்னையர் தினம் கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சி!

மொத்தத்தில்,
நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்!
அதே போல,
தாயின்றி அமையாது உலகு என்போம் நாம்...

Sunday 8 March, 2020

மகளிர் தினக் கவிதை 2020

மகளிரைக் கொண்டாடும் திருநாள் - ஆம்
கொண்டாட வேண்டிய திருநாள்

மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டும் - ஆம்

மாதவம் செய்தவர்கள் மகிழ்வாக
வாழவும் வழி செய்திட வேண்டும்

அன்னையாய் உதித்தவர்கள் - ஆம்
நமக்கு முன்னே உதித்தவர்கள்

சகோதரிகளாக பிறந்தவர்கள் - ஆம்
நம் அன்னை வயிற்றிலே உடன் பிறந்தவர்கள்

உடன் பிறவா தோழிகள் - ஆம்
நம் பிரிவைத் தாங்கா தோழிகள்

நம் வாழ்வில் பாதியாக இணைந்தவர்கள் - ஆம்
மனைவியாக மீதி வாழ்வில் பயணம் செய்பவர்கள்

மகளாய் தரிப்பவர்கள் - ஆம்
மகளாய் அவதரிப்பவர்கள்

முற்றிய சோதனைகளைக் கடந்து
வெற்றியின் படிகளாக மாற்றிய பெண்கள்

நாட்டின் கண்களாக இருப்பவர்கள் - ஆம்
நம் நாட்டின் ஒளி வீசும் கண்களாக இருப்பவர்கள்

அனைவரும் பெண்களாக இருப்பவர்கள் - ஆம்
நம் வாழ்விலும் கண்களாக இருப்பவர்கள்

கொண்டாடப் பட வேண்டியவர்கள் - ஆம்
மகளிர் தினத்தன்று மட்டும் அல்ல

தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆம்
தினந்தோறும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்

அன்புக் குவியலாய் இருக்கும் மகளிர் அனைவரும்
இமயமாய் உயர்ந்து சுதந்திரம் மற்றும் பாதுகாப்புடன் நடந்து

வளமாக வாழ வழி செய்ய உறுதி எடுப்போம்

இனி ஒரு விதி செய்வோம்
மங்கையினர் பாதுகாக்கும் வழி செய்வோம்!!!

நன்றி,
தெய்வேந்திரன்


Saturday 15 February, 2020

அன்பு தினக் கவிதை!

எலுமிச்சை தோலுடையவள்
கருப்பட்டி குணத்தவள்

அவியலாய் கவர்ந்தவள்
குவியலாய் திரிபவள்-அன்புக்
குவியலாய் திரிபவள்

தென்றலாய் வீசுபவள்
குன்றாக இருந்தவன் - மீது
தென்றலாய் வீசுபவள்

கடுஞ்சொல் தாங்கா மனமுடையவள்
கடுஞ்சொல் கண்டு விலகி நிற்பவள்

கலைகளில் ஆர்வமிகுந்தவள் - ஆம்
பல கலைகளில் ஆர்வமிகுந்தவள்

வளையாவிடினும் வளைத்து ஆடுபவள்
தன் கலைத் திறனை
மலையாத வண்ணம் காப்பவள்

சினத்தை சிக்கனமாக்க நினைத்தவள்
குணத்தை குறைவின்றி காட்டுபவள்

அனைவருக்கும் அன்பானவள் - எனக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆம், எனக்கும் அன்பானவளே!

அன்பால் உலகை ஆள நினைக்கும்
என்பால் அன்பு கொண்டவளுக்கும்

இனிய அன்பு தின வாழ்த்துகள்!!! 💐💐💐