Saturday 25 July, 2009

30.கவிதை கரு


காலைப பனியில் மலர்ந்த கவிதை
கதிரவன் கதிரில் புலர்ந்த கவிதை

மழலையின் செல்ல சிணுங்கலில் எழுந்த கவிதை
அன்னை அன்பில் உணர்ந்த கவிதை
தந்தை பண்பில் வளர்ந்த கவிதை

இயற்கையின் சிரிப்பில் உதித்த கவிதை
இயற்கையின் இறப்பில் கலங்கிய கவிதை
மழைத் துளியில் சிலிர்த்த கவிதை

நட்பின் வலியில் பதிந்த கவிதை
காதல் உணர்வில் கனிந்த கவிதை

இரவின் கனவில் கலந்த கவிதை
ஜனனம், மரணம் உணர்த்திய கவிதை

அனைத்தும் படைத்த
கவிதை படைப்பாளிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்


இவண்,
கவிதை கரு கிடைக்காமல் கவிதை எழுத முயன்றவன்

Saturday 11 April, 2009

29. இலையுதிர் காலம்..

அன்புடன் வாழ்ந்த நாட்கள் சில
அன்புக்காய் ஏங்கிய நாட்கள் பல

செல்வதுடன் வாழ்ந்த நாட்கள் சில
செல்வத்திற்க்காய் ஏங்கிய நாட்கள் பல

புன்னகையுடன் வாழ்ந்த நாட்கள் சில
புன்னகைக்காய் ஏங்கிய நாட்கள் பல

கவிஞன் போன்று வாழ்ந்த நாட்கள் சில
கவிஞனாய் மாற ஏங்கிய நாட்கள் பல

நட்புடன் வாழ்ந்த நாட்கள் சில
நட்புக்காய் ஏங்கிய நாட்கள் பல

அந்நாட்களில் ஏனோ மகிழ்ச்சியுடனே கழித்தேன்..
இனி வரும் நாட்களில்???.

(கல்லூரி நாட்கள் முடிந்து வீடு திரும்பும் போது தோன்றியவை..)

28. உயிரே உயிரே




நூற்றாண்டு காலம் வரை வாழ விட்டாய் பெரும் மனிதராக..
நொடிப்பொழுதில் மாற்றினாய் வெறும் கூடாக..

என் கால் தூசியினடத்தும் சிறிய பூச்சிக்கும்
பசுமையான மரத்திற்கும்
ஐந்தறிவு விலங்கிற்கும்
ஆறறிவுள்ள (!) எமக்கும்
நீ பொதுவானாய்

காதல் மெயத்தவர்களுக்கு நீயே கவிதை ஆனாய்..
காதல் பொய்த்தவர்களுக்கு பிரியாவிடையும் கொடுத்தாய்..

அந்நாள் இயற்கையின் வழியே பிரிந்தாய் எமை விட்டு
இந்நாள் செயற்கையின் வழியே பிரிகிறாய்..

சிலர் வெடிகுண்டுகளினால்
சிலர் வாகனத்தினால்..
சிலர் நோய்களினால்..
சிலர் பகையினால்..
எமக்கென்று ஏற்பட்ட வசதிகள் யாவும் எமனாகிப் போனதேன்..

நிலையற்ற இவ்வுலகில் நீடிக்க மனமில்லையோ..
விலையற்ற உனக்கு எமதர்மனும் நண்பனாகி விட்டானோ..



மனிதம் காக்கும் மனிதர்களிடம் நெடுநாள் இரு.
மனிதம் கொல்லும் விலங்குகளிடம் சில நிமிடம் கூட இராதே..