Sunday 31 July, 2022

பிறந்த தினம் 2022

எங்கள் இருவரின் 

பிறந்த தினத்திற்காக!!!

01 ஆகஸ்து 2022


சிறு குழந்தையாக இருந்த

பருவத்தில் விரல் தொட்ட

நினைவில்லை...

(ஏனெனில், ரொம்ப தூரம்.. 

கை விரல் எட்டவில்லை...)

 

ஏனெனில், நீ வளர்ந்தது 

சிங்காரச் சென்னையில்...

நான் இருந்தது முத்து நகரில்..


ஆனால் குஷி படம் போல 

காலம் நம்மை, 

என்றோ ஒருநாள் இணைக்கும்

என்று நினைத்ததுண்டு...


இடையில்... பருவம் எய்தினோம்..

 

பருவம் எய்த பிறகு 

அருகில் வர நினைத்ததில்லை..

90's kids என்பதால்...

 

அன்றொரு தினம்!!!

எனது, உனது பிறந்த தினம்,

நமது பிறந்த தினம் 

என்றறிந்த தினம்!!!

வாழ்வின் மறக்க இயலா தினம்..


மற்றொரு தினம்...

உன் விரலை 

என் விரலோடு இணைத்த தினம்...

அன்று முதல் 

விரல் பிடித்து நடக்கப் பழகினோம்...

இல்லை, இல்லை...

கரம் பிடித்து வாழத் துவங்கினோம்!!!


இப்படியொரு வரம் வேண்டும்..

நாமிருவரும்...

நெடுந்தூரம் செல்ல!!!

கரம் பிடித்தே செல்ல!!!

இணைபிரியாத் தோழியாக நீ 

உற்ற தோழனாக நான்...

இருகரம் பிடித்தே செல்ல!!!


வாழ்க வளமுடன் தோழியே!!!

[வாழ்க வளமுடன் மனைவியே என்றால், 

பெரிய கிஃப்ட் (மறுபடியும்) வாங்கியாகணுமே.. ]

அதான் தோழி... 


இப்படிக்கு,

பிறந்த நாளை,

பொண்டாட்டியுடன் 

கொண்டாடி மகிழும் தெய்வா!!!


01 ஆகஸ்து 2022

ஒரு நாள்... அது எங்கள்

இருவரின் பிறந்தநாள்...

 



Monday 7 March, 2022

மகளிர் தினம் 2022

ஒரு கவிக்கு

உரு கொடுக்க

மறு முயற்சி(கள்) செய்யும்

சிறு கவி நான்!


ஆனால்,

கரு முழுமைக்கும்

உரு கொடுத்து

மறுபிறவி(கள்) எடுக்கும்

ஒரு அன்னையாகவும்


வீட்டின் மையக்

கருவாக, அன்பின்

உருவாக வாழும்

ஒரு உன்னத 

உறவாகவும்


சரி பாதி உயிராக,

ஆணின் இறுதிக் கால

உற்ற துணையாகவும்


உடன் பிறந்து, 

சரி பங்கு பெற்று,

அவ்வப்போது பெற்றோரிடம் 

பற்ற(வும்) வைத்து,

அன்பையும், அழகான வம்பையும் 

சரி பாதி தரும் சகோதரிகளாகவும்,


வாழும் மகளிர் அனைவரும் 

அதிகார மையத்தில்,

தைரியமாக முன்னே(றி) வர,

வாழ்த்துகள் கூற

கவி படைக்க முயன்றேன்.


நன்றி,

தெய்வா


Friday 4 February, 2022

காற்றே

நீ, 

இந்த பூமிப் பந்தினை

சுற்றுகிறாயா!

இல்லை

சுழற்றுகிறாயா!?


பல இடங்களில்

மென்மையாகவும்,

சில இடங்களில்

வன்மையாகவும்

பயணிக்கிறாய்!


சில நொடிகள்

எம் சுவாசப் பைகள்

உள்ளேயும் சென்று வருகிறாய்!


அதனால் உன்னை

நான் சுவாசிக்கிறேன்!


எம் மூச்சு பாதை

திறந்திருக்கும் வரை


எம் மூச்சுக் குழாய்கள்

உன்னை வரவேற்கக் காத்திருக்கும்!


தொடர்ந்து பயணிப்போம்!