Friday 15 May, 2020

அன்னையர் தினக் க(வி)தை

அன்னையர் தினக் க(வி)தை!

அன்னையர் என்றாலே அன்பின் இமயம் தானே
அன்பின் இமயத்தில், முத்தாய் இருக்கும் புன்னகை!

ஆம், தன் கரு உருவான நாள் அன்று சிலிர்க்கும் புன்னகை
கரு வளரும் ஒவ்வொரு நாளும் மறவா புன்னகை!!!

வாரங்கள், மாதங்கள் கடந்தாலும்,
குழந்தை பிறக்கவிருக்கும் முந்தைய நாட்கள்
அப்பப்பா! என்ன ஒரு ஆனந்தம்! ஆர்ப்பரிப்பு!

குழந்தை பிறக்கும் நொடி வரை நம் இதயம்
இமயம் வரை துடிப்பதும்
பிறந்த பின் ஆழ் கடல் வரை பூரிப்பதும் இயற்கை!!!

மங்கையாக, சகோதரியாக, தாரமாக இருந்தாலும்
அன்னையாக உருமாறும் போது முழுமை அடைகிறாள் பெண்!!!

அன்னையாக இருப்பதே பெரிய சவால்!
அதுவும் அமெரிக்காவில், இங்கு வளைகுடாப் பகுதியில்,
அன்னையாக இருப்பது எவ்வளவு பெரிய சவால்...

ஓரிரு தியாகங்கள் செய்து, விருது வாங்கும் மக்களின் நடுவில்,
தியாகங்களின் குவியலாக இருப்பினும், விருது ஏதும் பெற்றதில்லை!!!

ஆம், அச்சிறந்த அன்னையருக்கும்,
ஓர் உலக அன்னையர் தினம் கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சி!

மொத்தத்தில்,
நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்!
அதே போல,
தாயின்றி அமையாது உலகு என்போம் நாம்...